விருத்தாச்சலம் அருகே உள்ள படுகலாநத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராதிகா மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது தாய் தந்தை இருவரையும் இழந்தவர். உறவினர்களின் அரவணைப்புக் கிடைக்காததால், அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர் கொண்ட ராதிகா இன்று 18 வயதிற்குட்பட்ட இந்தியப் பெண்கள் கால்பந்து அணிக்காக விளையாடுகிறார். 2009ம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். 2011ம் ஆண்டு ஜோர்டான் நாட்டில் நடந்த போட்டியில் இந்திய அணியில் ஆடி இந்திய அணியை இரண்டாம் இடத்திற்குக் கொண்டு வந்தார். விளையாட்டு வீராங்கனை செல்வி. கொ. ராதிகா அவர்களுக்கு விளையாட்டிற்கான 'புதிய தலைமுறை'யின் நம்பிக்கை நட்சத்திரம் 2013 விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.


Sponcers