மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறு காட்டுத்துறை என ஐந்து புதினங்களும் சாமுண்டி எனும் சிறுகதைத் தொகுப்பொன்றும் வெளிவந்துள்ளன. தமிழ் வளர்ச்சித்துறை விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, கலைஞர் பொற்கிழி விருது முதலான விருதுகளைப் பெற்றுள்ளார். மாணிக்கம், கீதாரி, அளம் போன்ற புதினங்கள் கல்லூரிகள், பல்கலைகழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.இவரது படைப்புகளை மையப்படுத்தி தமிழகத்தின் பல்வேறு பல்கலைகழகத்தைச் சார்ந்த மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். அளம், கற்றாழை ஆகிய புதினங்கள் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. எழுத்தாளர் திருமதி.சு.தமிழ்ச்செல்வி அவர்களுக்கு தமிழ் இலக்கியத்திற்கான 'புதிய தலைமுறை'யின் நம்பிக்கை நட்சத்திரம் 2013 விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.


Sponcers