ஒரு கன்டெய்னர் நிறுவனத்தில் டைப்பிஸ்ட் ஆகா வாழ்க்கையைத் துவங்கிய வான்மதி, இன்று ஒரு கன்டெய்னர் நிறுவனத்தின் சொந்தக்காரர். 10 ஆண்டுகளுக்கு முன் அவரையும், அவரது கணவரையும் சேர்த்து நான்கு ஊழியர்களோடு துவக்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று சேலம், பெங்களூர், ஓசூர், காக்கிநாடா எனப் பல இடங்களில் தொழில் நடத்துகிறது. கண்டெய்னரை வடிவமைப்பது, சீரமைப்பது, சர்வீஸ் செய்வது, நகரும் வீடுகள் அமைப்பது இவையெல்லாம் பெரும்பாலும் ஆண்களது தொழிலாக இருந்தது. அதில் கால் பதித்து வெற்றி கண்டவர் வான்மதி. தன தொழிலை வெற்றிகரமாக நிர்வகித்து வருவதோடு சுற்றுச் சூழல் சுகாதாரம், பெண்கள் சுய உதவிக்குழு மூலம் மகளிர் மேம்பாடு ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொழில் முனைவர் திருமதி. ம. வான்மதி அவர்களுக்கு தொழில்துறைக்கான 'புதிய தலைமுறை'யின் நம்பிக்கை நட்சத்திரம் 2013 விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

Sponcers